ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு இளம் தொழில்முனைவோருக்கு வழங்கிய புதிய அறிவுரை சமூக வலைத்தளங்களில் பெரியளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது 20–களிலேயே, அதாவது 20 முதல் 29 வயதுக்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார்.. அவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..
உபாசனாவின் பதிவில் தொடங்கிய விவாதம்
இந்த சர்ச்சை தொழில்முனைவோர் உபாசனா கோனிடெல்லா தனது அனுபவத்தை X-ல் பகிர்ந்ததையடுத்து உருவானது. அவரின் பதிவில் “ “IITH Hyderabad மாணவர்களிடம் ‘எத்தனை பேர் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கும் போது, பெண்களை விட அதிகமான ஆண்கள் கைகளை உயர்த்தினர். பெண்கள் அதிகம் தொழில் நோக்கமாக உள்ளனர். இதுவே புதிய முன்னேறும் இந்தியா.” என்று குறிப்பிட்டிருந்தார்.. இதைத் தொடர்ந்து ஸ்ரீதர் வேம்பு இளைஞர்களுக்கு 20–களிலேயே திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து அறிவுரை கூறினார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோருக்கு.. ஆண்கள், பெண்கள் ‘திருமணம் மற்றும் குழந்தைகளை தள்ளிப்போட வேண்டாம்’ என்று கூறுகிறேன். இது சமூகத்துக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமை. இது பழமையானதாக தோன்றலாம், ஆனால் மீண்டும் ஒரு நாள் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்” என கூறியிருந்தார்..
பொருளாதார சிக்கல்களை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டிய போது அதற்கு பதிலளித்த வேம்பு “ “இளம் தலைமுறையின் வாழ்க்கைச் செலவு சிக்கல் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். ஆனால் செலவு செய்யும் திறன் இருந்தாலும் திருமணம் & குழந்தைகளில் சோர்வு காணப்படுகிறது. அது கலாச்சாரம் தொடர்பானது.” என்றார்.
நெட்டிசன்கள் எதிர்வினை
கவுரவ் சௌதரி என்ற எக்ஸ் பயனர் “ இன்றைய இளைஞர்கள் கமிட்மெண்ட்டிற்கு பயப்படவில்லை; நிலையற்ற சம்பளம், வேலை–உறவு சமநிலை இல்லாமை, வருமானத்தின் 40% விழுங்கும் அமைப்பு.. இவற்றின் மீது குடும்பம் அமைப்பதற்கே பயப்படுகிறார்கள். அவர்கள் திருமணத்தை மறுப்பதில்லை; திருமணம் தவறாகப் போனால் வரும் தண்டனைகள் மற்றும் மகிழ்ச்சி குறையும் அபாயத்தையே மறுக்கிறார்கள். அவர் விவாகரத்து, குழந்தை காவல், பராமரிப்புத் தொலை போன்ற சட்டங்களும் இளைஞர்களை தயக்கத்தில் ஆழ்த்துகிறது..” தெரிவித்தார்.
மோனிகா வர்மா என்ற பயனர் ஸ்ரீதர் நேரடியான கேள்வி எழுப்பினார்: “ ஒரு பெண்ணின் வேலைக்கு இடையே நிற்கும் மகப்பேறு விடுமுறை ரணமாக வரும் பின்னடைவை யார் ஈடு செய்யப் போகிறார்கள்? குழந்தை பெற ஆசை இருக்கிறது; ஆனால் அதுவே வாழ்க்கையின் ஒரே நோக்கம் அல்ல.” என்று கூறியிருந்தார்..
அவரின் இந்த பதிவுக்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு “ “வாழ்க்கை ஒரு போட்டி அல்ல. எந்த வயதிலும் சிறந்து விளங்கலாம். 30 வயது பலருக்கு புதிய தொடக்கம். இந்த பார்வையை எனது அம்மா எனக்குக் கற்றுத் தந்தார்.” என்று பதிவிட்டார்…
மேலும் மார்க் ஸக்கர்பெர்க் உடன் ஒப்பிட்டால் நான் தோல்வி எனலாம். ஆனால் நான் ஒவ்வொரு காலையும் எழும்போது ‘நான் தோல்வி’ என்று நினைக்கவில்லை.” என்றும் கூறியிருந்தார்..
ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன?
Pew Research Centre (2024) ஆய்வில், இன்றைய இளைஞர்கள் முந்தைய தலைமுறையை விட தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.. 30–34 வயதினரில் 2023-ல் 27% மட்டும் குழந்தைகள் வைத்திருக்கிறார்கள், 1993-ல் இது 60% என்பதும் தெரியவந்ததுல்ல்
Stanford Center on Longevity (2018) ஆய்வு முடிவுகள்
25 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூறிய “இலட்சிய வயது”:
திருமணம்: 27 வயது
வீடு வாங்குதல்: 28 வயது
குடும்பம் தொடங்குதல்: 29 வயது
ஆனால், இந்த இலக்குகளை அடைவது ஒவ்வொரு தலைமுறையிலும் குறைந்து கொண்டே வந்துள்ளது.
ஆராய்ச்சி விஞ்ஞானி டமாரா சிம்ஸ் பேசிய போது “ இளைஞர்களே மாற்றத்தை உருவாக்கும் தலைமைக்குழு அல்ல. திருமணம் & குடும்பம் தாமதமாகிற போக்கு அவர்களுடைய தலைமுறையிலேயே ஆரம்பிக்கவில்லை.” என்று குறிப்பிட்டார்..
ஸ்ரீதர் வேம்புவின் அறிவுரை சமூகத்தில் திருமணம், கரியர், பொருளாதாரம், சட்டங்கள், கலாச்சார மாற்றம் போன்ற பல பிரிவுகளில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
Read More : Breaking : மீண்டும் பீகார் முதல்வாராகிறார் நிதிஷ்குமார்! நாளை பதவியேற்பு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!



