தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முன்கூட்டியே நிதி ஏற்பாடுகளைச் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் அடிப்படைப் பொறுப்பாகும். குறிப்பாக மகள்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் போன்ற வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் அதிக செலவுகள் தேவைப்படும். இதற்காக முன்கூட்டியே சேமிப்பு செய்வது குடும்பத்தின் நிதி பாதுகாப்புக்கு மிக அவசியம்.
அத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்திய சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) தற்போது பெற்றோர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. தபால் அலுவலகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்கக்கூடிய இந்தச் சேமிப்பு கணக்கு, சிறுமியின் பெயரில் திறக்கப்படுவதால், அவரின் எதிர்காலத்திற்கான நம்பகமான நிதி ஆதாரமாக அமைகிறது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு சுக்கன்யா சம்ருத்தி யோஜனா (SSY) என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், 10 வயதுக்குள் இருக்கும் மகளின் பெயரில் பெற்றோர் கணக்கைத் திறக்கலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அரசின் உத்தரவாதத்துடன், 8.2% வட்டி விகிதத்தில் சேமிப்பு பாதுகாப்புடன் வளரும். வட்டிக்கு முழுமையாக வரி விலக்கு கிடைக்கும்.
உதாரணமாக ஒரு பெற்றோர், தனது மகளுக்கு 5 வயதாகும் போது கணக்கைத் திறந்து, தொடர்ந்து 15 ஆண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் (மாதம் ₹12,500) செலுத்தினால், மொத்த முதலீடு: ₹22.5 லட்சம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு பெறும் தொகை: ₹69.27 லட்சம். இதில் வட்டி வருமானம் மட்டும்: ₹46.77 லட்சம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம், பெண் குழந்தை 21 வயது ஆன பின் முடிவடைகிறது. இருப்பினும், 18 வயதுக்குப் பிறகு கல்வித் தேவைகளுக்காக பகுதியளவு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதனால், மகளின் கல்விச் செலவுக்கு பெற்றோருக்கு நிதி அழுத்தம் இருக்காது. சந்தை ஆபத்து இல்லாமல், வரி விலக்கு மற்றும் உயர்ந்த வட்டி விகிதத்துடன், சுக்கன்யா சம்ருத்தி யோஜனா பெற்றோர்களுக்கு மிகவும் சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது.
Read more: நிஜ வாழ்வில் நாயகன்கள்.. சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கூலி பட கொண்டாட்டம்..!!