“விடுதல கிடைச்சிருச்சு”!. 40 லிட்டர் பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய நபர்!. வீடியோ வைரல்!

assam man milk divorce 11zon

அசாமில் மனைவியுடன் விவாகரத்து ஆனதை கொண்டாடும் வகையில் 40 லிட்டர் பாலில் குளித்து மகிழ்ச்சியடைந்த கணவனின் வீடியோ வைரலாகி வருகிறது.


அசாமின் நல்பாரி மாவட்டம் பரலியாபர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், அவரது மனைவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது மனைவி திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தொடர்ந்ததாகவும், பல முறை தனது குடும்பத்தையும் கைவிட்டு காதலனுடன் இரண்டு முறை ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது மனைவியின் செயல்களால் மனமுடைந்த அலி விவாகரத்து கோரி வழக்குத் தொடர முடிவு செய்தார். இதனையடுத்து, சட்டபூர்வமாக விவாகரத்து பெற முடிவு செய்தார். இந்நிலையில், விவாகரத்து கிடைத்ததும், பாலில் குளித்து அதை கொண்டாடினர். 40 லிட்டர் பாலை ஊற்றி குளித்து அவர் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், தற்போது அவரது மகள், அவரது மனைவியுடன் உள்ளார். என் மனைவியை பிரிந்த பின்னர், நான் புதிதாக பிறந்ததை போல் உணர்கிறேன். @zindagi.gulzar.h என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வைரல் வீடியோவில், அலி வெள்ளை பனியன் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து, 40 லிட்டர் பாலை தன் மீது ஊற்றுவதைக் காணலாம். “நான் சுதந்திரமானவன்” என்று மகிழ்ச்சியுடன் அலி கேமராவைப் பார்த்துச் சொல்கிறார்.

Readmore: அதிக உப்பு உட்கொள்வதால் இந்தியர்களுக்கு இதய நோய், சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் அபாயம்!. ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி!

KOKILA

Next Post

மூன்று வடிவங்களில் காட்சி தரும் சிவன்.. மாதம் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் புனித தலம்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Mon Jul 14 , 2025
தமிழகத்தில் சிவனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினமும் அன்னாபிஷேகம் செய்யும் அபூர்வத் திருக்கோயில் எது என்று கேட்டால், அது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம் தான். இந்தத் தலம், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தையும், சிறப்பு பூஜை முறைகளையும் பேணிக் காக்கும் ஒரு மேன்மை வாய்ந்த சிவஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்கிய தனிச்சிறப்பு ஒரே சன்னதியில் சிவலிங்கம் (மூலவிஷேகம்), நடராஜர், சிவபாதம் என […]
pathachali temple

You May Like