ஒரே நாளில் ரூ.840 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Gold Rate today 3

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ. 73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

அந்த வகையில் கடந்த வாரம், தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த வாரம் மட்டும் 3,000 வரை தங்கம் விலை உயர்ந்தது.. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 74,440க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.105 குறைந்து ரூ.9,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ. 73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : பிஎஃப் பயனர்கள் கவனத்திற்கு.. ஆன்லைனில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. EPFO எச்சரிக்கை..

RUPA

Next Post

மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. இந்த முறை எங்கு?

Tue Jun 17 , 2025
அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இன்று ஜூன் 17 செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தன்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அனைத்து ஏர் இந்தியா பயணிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர், மேலும் யாருக்கும் […]
Air India 1

You May Like