இனி நகையே வாங்க முடியாது போல! ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Jewellery 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ..75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தது.. ஆனால் தற்போது தங்கம் விலை உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.9,470-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து, ரூ..75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.131-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,31,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : உலகையே வியக்க வைத்த இந்தியாவின் பணக்கான பிச்சைக்காரர்.. சொத்து மதிப்பை கேட்டால் அசந்தே போவீர்கள்..!!

RUPA

Next Post

வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Fri Aug 29 , 2025
The Tamil Nadu government has ordered the immediate filling of vacant office assistant posts in the revenue department.
tn govt 20251 1

You May Like