Breaking : இன்றும் புதிய உச்சம்.. ரூ.81,000-ஐ கடந்த தங்கம் விலை.. மீண்டும் ஒரு கிராம் ரூ.10,000ஐ தாண்டியது.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி..

gold necklace from collection jewellery by person 1262466 1103

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.78,000-ஐ தாண்டியது.. மேலும் கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது.

ஆனால் நேற்று காலை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், மாலை மீண்டும் உயர்ந்தது.. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ. 81,000ஐ கடந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 90 உயர்ந்து, ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ. 720 உயர்ந்து ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : நாட்டின் புதிய துணை ஜனாதிபதி யார்?. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது!

RUPA

Next Post

நள்ளிரவில் ஏசி கம்ப்ரசர் வெடித்து கோர விபத்து.. வளர்ப்பு நாய் உட்பட ஒரு குடும்பமே பலியான சோகம்..!!

Tue Sep 9 , 2025
Faridabad Man, Wife, Daughter, Pet Dog Killed In AC Blast
AC Blast

You May Like