ஷாக்.. தங்கம் விலை இன்றும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு..

gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1,120 உயர்ந்துள்ளது

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.9,155க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து, ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ஆக.1 முதல் புதிய UPI விதிகள்.. பேலன்ஸ் சரிபார்ப்பு முதல் ஆட்டோ டெபிட் வரை.. பல முக்கிய மாற்றங்கள்..

RUPA

Next Post

உடல் எடையை குறைக்க தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..? - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Mon Jul 14 , 2025
How far should you walk every day to lose weight?
walk 2

You May Like