2 நாட்களில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

indian traditional gold jewellery beautiful 1047188 27813

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000-க்கும் மேல் குறைந்தது. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.. நேற்று ஒரே நாளில் ரூ.840 உயர்ந்ததால் நகைப்பிரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 உயர்ந்து, ரூ.9,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.1200 உயர்ந்துள்ளது.

ஆனால் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : IRCTC-ன் ‘RailOne’ சூப்பர் ஆப் அறிமுகம்!இனி அனைத்தும் ஒரே இடத்தில்! டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை..

English Summary

In Chennai, the price of gold has increased by Rs. 360 per sovereign, selling for Rs. 72,520.

RUPA

Next Post

உங்க கிட்ட இன்னும் ரூ.2,000 நோட்டுகள் இருக்கா..? - RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Wed Jul 2 , 2025
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி 2023 மே 19 அன்று முடிவு செய்தது. நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது. பணம் கொண்டு வருபவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 98 சதவீதம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது […]
rbi rs 2000 note withdrawn 1684512676

You May Like