சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.73,680 விற்பனை செய்யப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை சரசரவென குறைந்தது.. இதனால் கடந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3,000 என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்தது.. நேற்றும் சவரனுக்கு ரூ.80 தங்கம் விலை குறைந்தது..
இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.9,210க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.73,680 விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : உஷார்!. வயிறு தொடர்பான பிரச்சனைக்கு பயன்படும் மாத்திரையில் புற்றுநோய் கூறுகள்!. மத்திய அரசு எச்சரிக்கை!.