தங்கம் விலை இன்றும் தாறுமாறு உயர்வு.. ரூ.78,000-ஐ நெருங்கியதால் பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

Jewellery 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து, ரூ.9,725-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து, ரூ.77,800க்கு விற்பனை செய்யப்பட்டது.. கடந்த 3 நாட்களில் ரூ.2000க்கும் மேல் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.78,000-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1உயர்ந்து, ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : உங்கள் UPI பேமேண்ட் பாதுகாப்பாக இருக்க உதவும் 6 டிப்ஸ்..! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

RUPA

Next Post

1,000க்கும் மேற்பட்டோர் பலி.. அடியோடு அழிந்து போன கிராமம்.. சூடானை நிலைகுலைய வைத்த பயங்கர நிலச்சரிவு..!!

Tue Sep 2 , 2025
Landslide kills more than 1,000 in Sudan’s Darfur region, armed group says
landslide

You May Like