இதுக்கு ஒரு எண்டே இல்லையா? தங்கம் விலை இன்றும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

1730197140 4512 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த வாரத்தில் ரூ.1300க்கு மேல் குறைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ரூ.800 உயர்ந்தது.. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. ஆனால் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.9,405-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆனால் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடவே கூடாது.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!

Thu Aug 28 , 2025
Diabetic patients should never eat these fruits.. You must know this..!!
Fruits for diabetes

You May Like