Flash : தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை..! 1 கிராம் தங்கம் ரூ.11,000ஐ நெருங்கியது; 1 சவரன் எவ்வளவு தெரியுமா?

jewelry photography 808279 2

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.10,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை… அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.161 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,61,000 விற்பனையாகிறது.

Read More : அக்.3ஆம் தேதியும் அரசு விடுமுறையா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி..!! உண்மையை உடைத்த TN Fact Check..!! ஏமாற்றத்தில் ஊழியர்கள்..!!

English Summary

Gold prices today rose by Rs. 240 per sovereign and are being sold at Rs. 87,120.

RUPA

Next Post

ஒரு மாதம் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Wed Oct 1 , 2025
Did you know that eating an apple on an empty stomach can make a positive difference in your entire lifestyle?
apple

You May Like