ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் விற்பனையானது.
இந்த நிலையில் 2026 புத்தாண்டு நாளில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ,1 குறைந்து ரூ.256-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.2.56 லட்சத்திற்கு விற்பனையாகிறது..
Read More : நாட்டு மக்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதி..!



