ஒரே நாளில் ரூ.600 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

360 F 613229837 ohXkiDGLI6YYcm1310lsyik3sralKlQN

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,240க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.. சில நாட்கள் மட்டும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.73,840க்கு விற்பனையானது..

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9155க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,240க்கு விற்பனையானது.

எனினும் இன்று வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் குறைள்ளதால் சாமானிய மக்களும் நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : ஆதார் இல்லாமல் இனி பான் கார்டு பெற முடியாது!. ஜூலை 1 முதல் புதிய ரூல்ஸ்!. SMS மூலம் இணைப்பது எப்படி?

RUPA

Next Post

மாதவிடாய் முதல் நீரிழிவு வரை.. வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

Tue Jun 24 , 2025
வயதாகும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்றும், எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்றும் எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்காக பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தால்.. அது நிச்சயமாக சாத்தியமாகும். அதன் ஒரு பகுதியாக.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிக்கவும். குறைந்தது பத்து நாட்களுக்கு இதை நீங்கள் குடித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இது என்னென்ன நன்மைகளைத் தரும் […]
cinnamon water

You May Like