ஒரே நாளில் சரசரவென குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சான்ஸ்.. குஷியில் மக்கள்..

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 45 குறைந்து, ரூ.9,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 குறைந்து, ரூ.124-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

உலகின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி!. இந்தியா உட்பட 19 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு!. அச்சத்தில் பாகிஸ்தான்!.

Wed Jul 16 , 2025
உலகின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தொடங்கியுள்ளது. அப்போது, பல மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்படும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவும் இந்த போர் பயிற்சியில் ஒரு பகுதியாகும். இந்தியா தனது 19 நட்பு நாடுகளுடன் போருக்குத் தயாராகத் தொடங்கியுள்ளது என்று கூறலாம். சுமார் 35 ஆயிரம் வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தியாவின் இந்த இராணுவப் பயிற்சி பாகிஸ்தானின் பதற்றத்தை அதிகரிக்கும். உலகின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியின் […]
worlds largest military

You May Like