மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.440 குறைந்ததால் மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000-க்கும் மேல் குறைந்தது. எனினும் இந்த வாரத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது..

ஆனால் இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 குறைந்து, ரூ.9,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் ரூ.1500 வரை உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : இமச்சலப் பிரதேசம் : புரட்டிப்போட்ட கனமழை.. பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு.. ₹400 கோடி மதிப்பில் சேதம்..!

RUPA

Next Post

டீ குடிப்பதை நிறுத்தினால் ரூ.84 லட்சம் சேமிக்கலாம்..! எப்படி தெரியுமா..? ஷாக் ஆகாம படிங்க..

Fri Jul 4 , 2025
If you stop drinking tea, you can save 84 lakh rupees in 35 years. We will discuss this in detail in this post.
tea

You May Like