Flash : ஷாக்..! மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதோ..!

Gold prices

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.11,410க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து 166க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : மாணவர்களே..!! ரூ.10,000 ஊக்கத்தொகை வேண்டுமா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

RUPA

Next Post

“வரிகளுக்கு எதிராக இருப்பவர்கள் முட்டாள்கள்” அமெரிக்கர்களுக்கு 2,000 டாலர் வழங்கப்படும்.. ட்ரம்ப் அறிவிப்பு!

Mon Nov 10 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது சுங்கக் கொள்கையை (Tariff Policy) உறுதியாக பாதுகாத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான சுங்க வரிகள் (tariffs) அமெரிக்காவை “உலகின் மிகவும் செல்வமுள்ள மற்றும் மரியாதைக்குரிய நாடாக” மாற்றியதாக அவர் கூறியுள்ளார். விமர்சகர்களை “முட்டாள்கள்” என்று குறிப்பிடும் டிரம்ப், பணக்காரர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கரும் விரைவில் குறைந்தது 2,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹1.77 லட்சம்) சுங்க வருவாய் மூலம் […]
trump 11zon

You May Like