இன்றும் தங்கம் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

360 F 612420676 Az3c9EUa7JNa5ShgNII8DGt4XNEOtqv4 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த 2-ம் தேதி, ரூ. 1,120 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.9,295க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.123-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,23,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : எதுவுமே செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறலாம்.. மோடி அரசின் புதிய LIC திட்டம்.. என்ன தகுதி?

RUPA

Next Post

#Breaking : ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்..

Mon Aug 4 , 2025
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 81. சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிபு சோரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இந்த தகவலை அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று, நான் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன்…” என்று […]
152404165 1

You May Like