நகைப்பிரியர்களே.. தங்கம் விலை இன்று சற்று உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

68524a7a77342 gold rate today profit booking also took the steam out of gold prices which some analysts predicte 1811171 16x9 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. ரூ.360 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை , ரூ.5 உயர்ந்து ரூ.9,105க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் ரூ.124-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,24,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : மாதத்திற்கு 125 யூனிட் இலவச மின்சாரம்.. தேர்தல் நெருங்குவதால் வாக்குறுதிகளை அள்ளி வீசும் முதலமைச்சர்..

English Summary

In Chennai, the price of gold per sovereign has increased by Rs. 40 and is being sold at Rs. 72,840.

RUPA

Next Post

பவன் கல்யாண் பாணியில் இபிஎஸ்.. ஸ்டாலினை தோற்கடிக்க புது வியூகம்..!!

Thu Jul 17 , 2025
EPS in Pawan Kalyan style.. New strategy to defeat Stalin..!!
6873285 newproject21 1

You May Like