இன்று மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Gold new rate

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ..74,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த வாரத்தில் ரூ.1300க்கு மேல் குறைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ரூ.800 உயர்ந்தது.. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. ஆனால் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.9,355-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து, ரூ..74,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : Wow! ரூ.39,999க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ரூ.20க்கு 100 கிமீ மைலேஜ்! முழு விவரம் இதோ..!

RUPA

Next Post

சருமம் ஜொலிக்கும்.. கூந்தல் வலுவாகும்.. காலையில் வெந்தய நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

Tue Aug 26 , 2025
Skin glows, hair becomes strong, are there so many benefits of drinking fenugreek water in the morning?
fenugreek water 1

You May Like