Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று தாறுமாறு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

gold coins gold jewellery floor background 181203 24090 1

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்று ஒரே நாளில் ரூ.3,000 விலை குறைந்தது..

சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 135 உயர்ந்து ரூ.11,210க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.166க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ரயில்களின் கடைசிப் பெட்டியில் ஏன் “X” என்ற குறி உள்ளது? பலருக்கும் தெரியாத தகவல்..!

RUPA

Next Post

விடிஞ்சா கல்யாணம்.. காதலியுடன் ஓடிப்போன ஐடி மாப்பிள்ளை..! ரிஷப்ஷனில் மணப்பெண் இருந்த கோலம்..!! பரபரத்த கன்னியாகுமரி..

Wed Oct 29 , 2025
The incident of a groom running away with his girlfriend on the first day of his wedding has shocked Kanyakumari.
Marriage 2025 1

You May Like