நேற்று வரை மக்களை நடுங்க வைத்த தங்கம் விலை.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது. பின்னர் நேற்றும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை, ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : இந்தியன் ரயில்வேயில் வேலை.. ரூ.45,000 சம்பளம்.. டிகிரி போதும்! விண்ணப்பிக்க ரெடியா..?

RUPA

Next Post

டீ குடித்தால் இந்த பிரச்சனைகள் நீங்கும்..! ஆனா இப்படி குடித்தால் தான் முழு பலன் கிடைக்கும்..!

Wed Sep 10 , 2025
பலரும் தங்கள் நாளை ஒரு சூடான கப் தேநீருடன் தொடங்குகிறார்கள். டீ இல்லாமல் காலை முழுமையடையாததாக உணர்கிறார்கள். தேநீரின் சுவை மற்றும் நறுமணம் மனதை அமைதிப்படுத்துகிறது. இது சோர்வைப் போக்கி உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கிறது. ஆனால் மறுபுறம், பலர் செய்யும் சிறிய தவறுகளால், தேநீர் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்வதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும். தேநீர் சரியான முறையில் தயாரிக்கப்பட்டு குறைந்த அளவில் உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு உண்மையிலேயே உதவும் […]
masala tea benefits

You May Like