Breaking : மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவா? வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்ததால் ஷாக்கில் நகைப்பிரியர்கள்!

jewels

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இடை இடையே சிறிதளவு தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் விலை குறையவில்லை..

அந்த வகையில், சென்னையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது..

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது… அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,290க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 82,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ. 2 உயர்ந்து ரூ.145க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,45,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3.75 லட்சம்‌ வரை மானியம் வழங்கும் சூப்பர் திட்டம்…! முழு விவரம்…

RUPA

Next Post

பழிக்குப் பழி வாங்க துடித்த நண்பர்கள்.. மின் தடையால் ஆள் மாற்றி கொலை.. பகீர் சம்பவம்..!!

Sat Sep 20 , 2025
Friends who wanted to take revenge.. Power outage turned into murder.. Bagir incident..!!
west bengal wife murder 11zon

You May Like