Gold rate: அம்மாடியோவ்.. என்னா வேகம்..! ஒரே நாளில் 2,560 உயர்ந்த தங்கம் விலை..!! நகை பிரியர்கள் கனவில் இடி..

Traditional Gold Jewellery Collections

நம் நாட்டில் தங்கத்தின் விலை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. தேவை அதிகமாக இருப்பதால், தங்க இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் அதிக விலைக்கு தங்கம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதக் குறைப்பு, புதிய வரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தம் ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தவும் குறைக்கவும் வழிவகுத்தன.


இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்று (டிசம்பர் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050க்கு விற்பனை ஆனது

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,250க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் மாலையில் மீண்டும் சவரன் ரூ 960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.98,960-க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் ரூ. 2560 உயர்ந்தது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதேபோல் காலையில் வெள்ளி விலை ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆனது. மாலையில் வெள்ளி கிராம் ரூ 1 உயர்ந்து, 216 ரூபாய் விற்பனை ஆகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read more: இரவில் இப்படி தூங்கினால் ஆயுள் குறையும்.. ஆன்மீகம் சொல்லும் காரணம் இதுதான்..!!

English Summary

Gold prices rise by 2,560 in a single day..!! Jewelry lovers are shocked

Next Post

இனி AI ராஜ்ஜியம் தான்.. 2026 இவ்வளவு மோசமாக இருக்குமா..? பாபா வாங்காவின் பயமுறுத்தும் கணிப்பு..!

Fri Dec 12 , 2025
Now it's the kingdom of AI.. Will 2026 be so bad..? Baba Vanga's scary prediction..!
baba vanga new 11zon

You May Like