#Flash : 3 நாட்களில் ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.73,000-ஐ தாண்டியதால் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

gold 2 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது, ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 65 உயர்ந்து, ரூ.9,140க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,120 உயர்ந்துள்ளது

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4 உயர்ந்து, ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RUPA

Next Post

டெக்சாஸ் வெள்ளம்!. பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!. அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

Sat Jul 12 , 2025
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளநிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் டிரம்ப் நேரில் சென்று ஆய்வு செய்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை வெள்ள […]
texas floods trump visit 11zon

You May Like