சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000-க்கும் மேல் குறைந்தது. ஆனால் இந்த வாரத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது..
அந்த வகையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 உயர்ந்து, ரூ.9,105க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.1,520 உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து, ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More : சேமிப்புக் கணக்கு இருக்கா ? இனி இதற்கு அபராதம் இல்லை! குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி!