Breaking : இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் தாறுமாறு உயர்வு.. அதுவும் இவ்வளவா? கதறும் நகைப்பிரியர்கள்..!

gold new

இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ. 87,600க்கு விற்பனையாகிறது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது.. ஆனால் நேற்று காலை, மாலை என 2 முறை தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் விஜயதசமி நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. ஆனால் மாலையில் விலை உயர்ந்துள்ளது.. இன்று காலை ரூ. 560 குறைந்த தங்கம் விலை மாலை ரூ.560 உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.10,950 விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ. 87,600க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை இன்று காலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மாலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதே போல் இன்று வெள்ளியின் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, அதே போல் வெள்ளி விலை காலையில் ஒரு கிராம் ரூ.2 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.1 உயர்ந்து ரூ.164க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,64,000 விற்பனையாகிறது.

Read More : ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இந்த நேரத்தில் ரயில்களில் சார்ஜ் செய்ய முடியாது..! முக்கிய அப்டேட்!

English Summary

The price of gold, which was low this morning, rose by Rs. 560 per sovereign in the evening and is selling at Rs. 87,600.

RUPA

Next Post

ஓனர் மனைவியுடன் உல்லாசம்..!! தடாலடியாக உள்ளே வந்த கணவன்..!! தாய் கண்முன்னே துடிதுடித்த இளைஞர்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

Thu Oct 2 , 2025
திருநெல்வேலியைச் சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் பெங்களூரு, கே.பி. அக்ராகரம் பகுதியில் ஒரு மிச்சர் கம்பெனி நடத்தி வந்தார். அதே கம்பெனியில் மாஸ்டராகப் பணிபுரிந்த கே.பி. அக்ரகாரத்தைச் சேர்ந்த பவன்குமார் (19) என்பவருக்கும், உரிமையாளர் அல்போன்ஸின் மனைவி சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் 4 மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸுக்குத் தெரிய வந்ததையடுத்து, பவன்குமார் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். அதன் பிறகு, அவர் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு, […]
Sex 2025 5

You May Like