இனி தங்கம் விலை 30% வரை குறையும்.. போர் பதற்றத்திற்கு மத்தியில் நிபுணர்கள் சொன்ன குட்நியூஸ்..

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது..


இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 30% தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்த போதிலும் சில நாட்களில் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. இந்த காலக்கட்டத்தில் தங்கம் புதிய உச்சத்தை எட்டியிருக்க வேண்டும்.. ஆனால் அந்தளவுக்கு விலை உயரவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களில் சுமார் 10%, அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 30% தங்கம் விலை சரிவைக் காணலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.. புவிசார் அரசியல் பதற்றங்கள், டாலர் மதிப்பிழப்பு உள்ளிட்ட பல காரணங்கள் தங்கம் விலை குறைவதற்கு காரணங்கள் என்றும் கூறுகின்றனர்.

“கடந்த 10-20 ஆண்டுகளில், மத்திய கிழக்கு மற்றும் கருங்கடலில் ஒரே நேரத்தில் போர்கள் நடக்கும் சூழ்நிலையை நாங்கள் பார்த்ததில்லை, இன்னும் புவிசார் அரசியல் நிலைமை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்-ஈரான் போரின் ஏழு நாட்களில், முதல் நாளில் தங்கம் உயர்ந்தது. ஆனால், அதன் பிறகு, பதட்டங்கள் அதிகரித்திருந்தாலும், தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்த காரணி முதிர்ச்சியடைந்திருப்பதை இது காட்டுகிறது” என்று பொருளாதார நிபுணர் அஜய் கெடியா தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற போர் பதற்றம் நிலவும் போது, தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தான் கடந்த காலங்களில் கவனிக்கப்பட்டது.. சர்வதேச சந்தையில் தங்கம் $3,500 அளவை விட உயர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

எனவே, அடுத்த ஒன்று-இரண்டு மாதங்களில், தங்கம் 8-10% எளிதாக சரிவைக் காணலாம். அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் உலகளாவிய பதற்றங்கள் கணிசமாகக் குறைந்தால் 30% சதவீதம் தங்கம் விலை குறையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில்லறை சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பின் தாக்கம் குறித்து நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பேசி உள்ளார். அப்போது “ தங்கத்தின் விலை உயர்வு சில்லறை சந்தைக்கு நல்ல அறிகுறி அல்ல. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் லாபம் ஈட்ட தங்கள் பழைய நகைகளை விற்கத் தொடங்குகிறார்கள். தங்கம் அதிக விலைக்கு விற்கப்படுவது திருமண பட்ஜெட்டையும் பாதிக்கும்.. ” என்று தெரிவித்தார்.

தங்கம் விலை உயர்வு காரணமாக முன்பை விட தற்போது அதிகமான மக்கள் தங்கத்தை விற்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, 5-7% பேர் தங்கள் பழைய நகைகளை மீண்டும் விற்க வந்தனர். இப்போது, ​​அது 25% ஆக உள்ளது என்று புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு தங்கம் விலை 30% உயர்ந்தது ஏன்?

இந்த ஆண்டில் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 30% அதிகரித்து ஒரு அவுன்ஸ் 3,355 டாலராக உள்ளது. ஜனவரி 1, 2025 நிலவரப்படி இது கிட்டத்தட்ட 2,600 டாலராக இருந்தது.

புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான முதலீடாக முதலீட்டாளர்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு முடிவுகளின் அடிப்படையில் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கம் மீது திரும்பியது.. இது சீனாவுடனான வர்த்தகப் போர் கவலைகளை மீண்டும் தூண்டியது. ரஷ்யா-உக்ரைன் மோதலும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மாறுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது..

Read More : ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி ஏன் ஒரு கையை மட்டும் பயன்படுத்துகிறார் ? பின்னணியில் உள்ள காரணம்…

RUPA

Next Post

தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கூட நான் அறிவிப்பேன்...! திருமாவளவன் பரபரப்பு

Wed Jun 25 , 2025
திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; […]
thirumavalavan 2025

You May Like