Gold Rate: 3 வது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Gold Rate today 3

சென்னையில் இன்றைய (ஜூன் 10, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இரண்டு நாட்களாக திடீரென சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், செவ்வாய் கிழமையான இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக தங்கம் விலை இன்றும் குறைந்தது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.71,560க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,19,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: ABC ஜூஸ் தெரியும்.. அது என்ன BTB ஜூஸ்..? எக்கச்சக்க நன்மைகள் இருக்கு.. என்னனு தெரிஞ்சுக்கோங்க..!!

Next Post

கவனம்.. வீட்டில் இந்த லிமிட்டை விட அதிகமாக தங்கம் வைத்திருந்தால்.. வருமான வரித் துறை நோட்டீஸ் வரும்..

Tue Jun 10 , 2025
குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால் வருமான வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்றால், முதலில் நினைவுக்கு வருவது தங்க நகைகள்தான். எனவே தங்க நகைகளை பெண்கள் வாங்கி குவித்து வருகின்றனர். ஆடம்பரம் என்பதை தாண்டி தங்கம் என்பது சேமிப்பாகவும் கருதப்படுகிறது. மேலும் அவசர தேவைக்கு அல்லது திடீர் தேவைக்கு அடகு வைத்தோ அல்லது விற்றோ பணம் பெறவும் தங்கம் உதவுகிறது.. […]
95404430 1

You May Like