இந்திய மக்களின் சேமிப்பிலும் தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்கையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர்.
சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலை உயர காரணம். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.
தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.72,000ஐ தாண்டி புது வரலாறை படைத்தது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வந்தது. இன்று மார்க்கெட் திறந்தது விலை எப்படியிருக்குமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதியான இன்று தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1120 உயர்ந்தது. ஜூன் 2 காலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காலையில் ஒரு சவரன் தங்கம் 240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் 880 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9060க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,480க்கும் விற்பனையாகிறது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Read more: சிக்கிம் : ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு.. 3 வீரர்கள் பலி, 6 பேர் மாயம்..