தங்கம் விலையை பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. போகிற போக்கை பார்த்தால் இன்னும் சில நாட்களில் தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கம் விலையானது மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு முந்தைய நாள் சாதனையை முறியடித்து வருகிறது. டொனால்டு டிரம்ப் விதித்த வர்த்தக வரி விதிப்பு, உலக அளவில் நிலவும் போர் பதற்றம், தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பது போன்றவற்றால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இந்த சில வாரங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.. குறிப்பாக நேற்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று காலையும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு கிராம், ரூ.11,400க்கும், ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக தங்கம் விலை உச்சம் தொட்டுள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.91,400க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,435க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.6000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி, ரூ.1,77,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை; பீகார் தேர்தலை முன்னிட்டு தேஜஸ்வி வழங்கிய வாக்குறுதி!