தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா?

DALL E 2023 11 06 17 35 28 Create a luxurious and captivating banner for an article that celebrates the marriage of traditional Indian gold jewelry with contemporary design aest e6f89ab642 1 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000-க்கும் மேல் குறைந்தது. ஆனால் இந்த வாரத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது..

ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000-க்கும் மேல் குறைந்தது. எனினும் இந்த வாரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் நேற்று குறைந்தது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது… அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 10 உயர்ந்து, ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : குட் நியூஸ்..! அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி…!

RUPA

Next Post

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் உத்தவ் - ராஜ் தாக்கரே.. புதிய கூட்டணியா?

Sat Jul 5 , 2025
20 ஆண்டுகளுக்கு பிறகு, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று வோர்லியில் நடைபெறும் ஒரு கூட்டுப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முடிவை வாபஸ் பெற்ற பிறகு, ‘அவாஜ் மராத்திச்சா’ (மராத்தியின் குரல்) என்ற வெற்றிப் பேரணியை இரு கட்சிகளும் […]
deccanherald 2024 12 22 xjjhf9my raj uddav 959214 1615117193

You May Like