தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை.
சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலை உயர காரணம். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.
மே-27 ஆம் தேதியான நேற்று சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8,995-க்கும் ஒரு சவரன் ரூ. 71,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 28 ஆம் தேதியான இன்று தங்கம் விலை குறைந்து நகைப்பிரியர்களை நிம்மதி அடைய செய்தது.
அதன்படி இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 8,935-க்கும் ஒரு சவரன் ரூ. 71,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆறாவது நாளாக அதாவது மே 23ஆம் தேதி முதல் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111 ஆகவே நீடிக்கிறது.
Read more: Alert | உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்..?