ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

heirloom jewellery symbol of tradition and love 1 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.9,020க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RUPA

Next Post

#Breaking : டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்..

Thu Jul 10 , 2025
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லி-என்சிஆரில் இன்று காலை 9.04 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் 14 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு […]
earthquake 165333220 16x9 1

You May Like