இனி நகை வாங்கணும் நினைக்க கூட முடியாது.. தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

gold jewellery table with other gold jewellery 1340 42836

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் 3,000 வரை தங்கம் விலை உயர்ந்தது..

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மீண்டும் உயர்ந்தது. மீண்டும் நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனையானது. அதே போல் வெள்ளியின் விலையும் நேற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.9235க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்களும் நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : சூப்பர் திட்டம்…! தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு…! முழு விவரம்

RUPA

Next Post

பான் கார்டு மூலம் சில நிமிடங்களில் ரூ.5 லட்சம் கடன் பெறலாம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை?

Sat Jun 21 , 2025
You can get a personal loan of Rs. 5 lakh in an instant with a PAN card. In this post, we will see what documents are required for it.
1639200 pan 4

You May Like