நற்செய்தி.. வாரத்தில் முதல் நாளே குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

360 F 612420676 Az3c9EUa7JNa5ShgNII8DGt4XNEOtqv4 1

சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது..

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் சற்று குறைந்தது. பின்னர் மீண்டும் உயர்ந்தது.. இப்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றக் இறக்கமாகவே இருந்தது. நேற்று ஒரு சவரனுக்கு ரூ.73,880க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரை ரூ.120க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9230க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் குறைள்ளதால் சாமானிய மக்களும் நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : 2030க்குள் செயற்கைக்கோள்கள் மூலம் குவாண்டம் தகவல்தொடர்பில் இந்தியா முன்னேறும்..! – IIT பேராசிரியர் நம்பிக்கை

RUPA

Next Post

எச்சரிக்கை.. இந்த 5 பணப் பரிவர்த்தனைகள் செய்தால் வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்..

Mon Jun 23 , 2025
The Income Tax Department may issue a notice if you carry out certain cash transactions.
Cash Deposit Limit 2.jpg 1

You May Like