ஷாக்.. இன்றும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.440 உயர்வு..

1730197140 4512 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது, ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 55 உயர்ந்து, ரூ.9,075க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து, ரூ.121-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,21,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : குட்நியூஸ்… 200 மருந்துகளின் விலை குறையப்போகிறது.. புற்றுநோய் மருந்துகளும் லிஸ்ட்ல இருக்கு.. விவரம் இதோ..

English Summary

In Chennai today, the price of gold rose by Rs. 440 per sovereign and is being sold at Rs. 72,600.

RUPA

Next Post

பால், சர்ச்சரை இல்லாத பிளாக் காபியை தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் உடலில் என்ன நடக்கும்..? - எக்ஸ்பர்ட் தரும் விளக்கம்

Fri Jul 11 , 2025
What happens to your body if you drink black coffee without milk or sugar for a month? - Expert explains
black coffee

You May Like