தங்கம் விலை இன்றும் உயர்வு.. ஆனா பெரிய அளவில் இல்லை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை , ரூ.5 உயர்ந்து ரூ.9,110க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : உலகின் பழமையான நாடு எது?. இந்திய எத்தனை ஆண்டுகள் பழமையானது தெரியுமா?. சுவாரஸிய தகவல்!

RUPA

Next Post

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. டோல் கட்டண விதியில் மாற்றம்.. இனி இந்த சேவைகள் கிடைக்காது..

Fri Jul 18 , 2025
மத்திய அரசு புதிய வாகன விதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில் இருந்தால், வாகன ஓட்டிகள், பதிவு புதுப்பித்தல், காப்பீடு, உரிமை பரிமாற்றம் அல்லது தகுதி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான சேவைகளைப் பெற முடியாது. இந்த நடவடிக்கை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை […]
AA1IDqO1

You May Like