#Flash : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவா? நகைப்பிரியர்கள் ஷாக்..

gettyimages 1157433618 640x640 1

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து, ரூ.74,280க்கு விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 105 உயர்ந்து ரூ.9,285க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்தும் ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

சைலண்டாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மருந்துகள் இவைதான்.. நீங்களும் யூஸ் பண்றீங்களா? உடனே செக் பண்ணுங்க..

Tue Jul 22 , 2025
Some commonly used medications are harmful to heart health. Do you know what they are?
Heart Disease Medications

You May Like