Gold Rate: ரெஸ்ட் மோடில் தங்கம் விலை.. நகை வாங்குற ஐடியா இருந்தா உடனே வாங்குங்க..!! இன்றைய நிலவரம் இதோ..

gold 1 1

சென்னையில் இன்றைய (ஜூன் 6, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.74 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது. அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போர் உள்ளிட்டவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம்.

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,040-ஆகவும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.73,040-க்கும், ஒரு கிராம் ரூ.9,130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: உலக சந்தையை உலுக்கிய டிரம்பின் வரி விதிப்பு.. 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய P&G நிறுவனம் முடிவு..!!

Next Post

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! எல்லாம் போச்சு..!! பெற்றோர்களே திடீரென கணக்குகள் முடக்கம்..!! உடனே இதை பண்ணுங்க..!!

Fri Jun 6 , 2025
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]
Selva Magal 2025

You May Like