Breaking : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.23,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன?

gold silver rate

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று கலை ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 23 குறைந்து ரூ. 253க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ. 23,000 குறைந்து ரூ. 2,53,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : நீங்கள் ஆன்லைனில் கடன் வாங்குகிறீர்களா? அப்ப கவனமாக இருங்க! மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது!

RUPA

Next Post

கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் விளக்கம் கொடுத்த ஸ்டாலின்.. ஏற்க மறுக்கும் காங்கிரஸ்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது..?

Tue Dec 30 , 2025
Stalin gave an explanation.. but Congress refuses to accept it.. What is happening in the alliance..?
mkstalin1 1645859395

You May Like