நாடு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8-வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், மேலும் அது தொடர்பான ஒவ்வொரு அப்டேட்க்காகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். 2025 ஜனவரியில் 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தை அரசாங்கம் அங்கீகரித்த போதிலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை, அல்லது ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
ஒரு கோடி ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள் காத்திருப்பு
தீபாவளிக்குள் 8-வது ஊதியக்குழு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகளுடன் நெருக்கமான ஆலோசனையில் இருப்பதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆணையம் தொடர்பான அறிவிப்பு நிலுவையில் இருப்பதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தார். இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.. 8-வது ஊதியக் குழுவின் உருவாக்கம் ஜனவரி 16, 2025 அன்று முறையாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மறுஆய்வு செய்வதே இதன் நோக்கம். இருப்பினும், 2026 க்கு முன்பு இது செயல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன..
பிட்மென்ட் காரணி என்ன?
புதிய ஊதியக் கட்டமைப்பில் ஃபிட்மென்ட் காரணி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் கணக்கீட்டை நேரடியாக பாதிக்கிறது. ஏழாவது ஊதியக் குழு ஃபிட்மென்ட் காரணியை 2.57 ஆக நிர்ணயித்தது. அந்த நேரத்தில், குறைந்தபட்ச சம்பளம் ₹18,000 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது, அதே நேரத்தில் அகவிலைப்படி 58 சதவீதமாக இருந்தன.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணியை அரசாங்கம் 1.92 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.34,560 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.17,280 ஆகவும் இருக்கும். இருப்பினும், இது 2.08 ஆக உயர்த்தப்பட்டால், அடிப்படை சம்பளம் ரூ.37,440 ஆகவும், ஓய்வூதியம் ரூ.18,720 ஆகவும் இருக்கும். மேலும், புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தவுடன், அகவிலைப்படி, அகவிலை நிவாரணம், அதாவது DA மற்றும் DR தானாகவே பூஜ்ஜியமாக (0%) மாறும்.



