சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கார்கள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களுக்கான வரியை குறைத்துள்ளது. இதன் விளைவாக, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ரெனால்ட் இந்தியா உள்ளிட்ட பெரிய கார் நிறுவனங்கள் தங்கள் வாகன விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. மஹிந்திரா கார்களுக்கான புதிய விலைகள் செப்டம்பர் 6 ஆம் தேதியும், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரெனால்ட் கார்களுக்கான திருத்தப்பட்ட விலைகள் செப்டம்பர் 22 தேதியும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு விவரம்: 56வது GST கவுன்சில் முடிவின்படி:
- சிறிய கார்கள் – 28% → 18%
- பெரிய கார்கள் மற்றும் SUV – 40% GST (கூடுதல் வரிச் சுமை இன்றி)
- மின்சார வாகனங்கள்- 5% GST தொடரும்
- முன்னர் பெரிய பெட்ரோல்/டீசல் கார்கள் 50% வரி (28% GST + 22% செஸ்) செலுத்திய நிலையில், இப்போது அது 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- 1500 cc வரை டீசல் கார்கள், 4,000 mm-க்கு குறைவான நீளத்துடன் – 18% GST
- 350 cc வரை மோட்டார் சைக்கிள்களும் – 18% GST
மஹிந்திரா கார்களில் குறைந்த விலை: மஹிந்திரா, தங்கள் மாடல்களுக்கு அதிகபட்சம் ₹1.56 லட்சம் வரை விலை குறைத்துள்ளது.
- போலிரோ/நியோ – ₹1.27 லட்சம் சேமிப்பு
- XUV3XO (பெட்ரோல்) – ₹1.40 லட்சம் சேமிப்பு
- XUV3XO (டீசல்) – ₹1.56 லட்சம் சேமிப்பு
- தார் 2WD – ₹1.35 லட்சம் சேமிப்பு
- தார் 4WD – ₹1.01 லட்சம் சேமிப்பு
- ஸ்கார்பியோ கிளாசிக் – ₹1.01 லட்சம் சேமிப்பு
- ஸ்கார்பியோ-என் – ₹1.45 லட்சம் சேமிப்பு
- தார் ரோக்ஸ் – ₹1.33 லட்சம் சேமிப்பு
- XUV700 – ₹1.43 லட்சம் சேமிப்பு
டாடா மோட்டார்ஸ் விலை குறைப்பு: டாடா மோட்டார்ஸ், தங்களின் பல பிரபலமான மாடல்களுக்கு அதிகபட்சம் ₹1.55 லட்சம் வரை விலை குறைத்துள்ளது.
- டியாகோ – ₹75,000 வரை குறைப்பு
- டைகோர் – ₹80,000 வரை குறைப்பு
- ஆல்ட்ரோஸ் – ₹1.10 லட்சம் வரை குறைப்பு
- பஞ்ச் – ₹85,000 வரை குறைப்பு
- நெக்சன் – ₹1.55 லட்சம் வரை குறைப்பு
- கர்வ் – ₹65,000 வரை குறைப்பு
- ஹாரியர் – ₹1.40 லட்சம் வரை குறைப்பு
- சஃபாரி – ₹1.45 லட்சம் வரை குறைப்பு
- ரெனால்ட் இந்தியா தனது கார்களின் விலையை ₹96,395 வரை குறைத்துள்ளது.
- கைஜர் – அதிகபட்சம் ₹96,000 குறைப்பு
- க்விட் – ₹49,000 – ₹57,000 குறைப்பு
- ட்ரைபர் – ₹77,000 – ₹80,000 குறைப்பு
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகனங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து மாடல்களுக்கும் செப்டம்பர் 22 முதல் 40% GST விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு தொடர்ந்து 5% GST இருக்கும்.
எந்த கார் அதிக சேமிப்பு தருகிறது?
- டாடா நெக்சன் – ₹1.55 லட்சம் குறைப்பு
- மஹிந்திரா XUV3XO டீசல் – ₹1.56 லட்சம் குறைப்பு
- குறைந்த விலை குறைப்பு – டாடா கர்வ் (₹65,000)
இந்த விலை குறைப்புகள் பண்டிகை காலத்தில் வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், கார் நிறுவனங்கள் GST குறைப்பின் முழுப் பயனையும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.