பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களுக்கு மாற்று வழிகளை கண்டறியும் முயற்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் சமையல் அடுப்பை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
இதற்கு அவர், ஹைட்ரஜன் ஆக்சிஜன் நோ கார்பன் கேஸ் என்று பெயரிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஹைட்ரஜன் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக், தனது கண்டுபிடிப்பை, டெல்லியில் நடைபெற்ற பசுமை ஹைட்ரஜன் கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.
இதில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த ஹாங் கேஸ் நிறுவனம், இந்த அடுப்பு மற்றும் தொழிற்சாலைக்கான சாதனங்களை காட்சிப்படுத்தியது. இந்த கண்டுபிடிப்பு தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஹைட்ரஜன் எரிவாயு அடுப்பு சந்தையில் விற்பனைக்கு வரும் என்று ஹாங் கேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தண்ணீரில் இயங்கும் இந்த அடுப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கண்டுபிடிப்புக்கு முறையாக உரிமம் கிடைத்தால், அது சமையல் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : “மாமா என்னை மன்னிச்சிருங்க”..!! அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்..!! போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே சம்பவம்..!!