தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ரேஷன் அட்டையின் வகையை மாற்றிக்கொள்ள முடியும். பொதுவாக, தமிழ்நாடு அரசு அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் (NPHH), சர்க்கரை ரேஷன் கார்டு மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டை என பல வகைகளில் அட்டைகளை வழங்குகிறது.
உங்கள் தற்போதைய ரேஷன் அட்டை, உங்களின் தற்போதைய பொருளாதார நிலைக்கு பொருந்தவில்லை என்றால், அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. உதாரணத்திற்கு சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், தகுதியிருந்தால் அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம். இது குறித்து உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியும் சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
* முதலில், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpds.gov.in/ க்கு செல்லவும்.
* இங்கு, முகப்பு பக்கத்திலேயே ‘தங்களது அட்டை வகையை மாற்ற’ என்ற விருப்பத்தை காணலாம். அதைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, பின்னர் ஓடிபி-யை பதிவு செய்யவும்.
* பிறகு, புதிய பக்கத்தில், ரேஷன் அட்டை வகையை மாற்றுவதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
* விண்ணப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வப் பதிவு எண் (acknowledgement number) வழங்கப்படும். அதை வைத்து, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதி இல்லாதவர்கள், மாதந்தோறும் தாலுகாவில் நடைபெறும் ரேஷன் அட்டை குறைதீர் முகாமுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம். உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, தகுதியிருந்தால் ஒப்புதல் அளிக்கப்படும்.
Read More : நவராத்திரி.. கொலு அமைக்க சரியான நேரம் எது..? எப்படி வழிபாட்டை தொடங்கலாம்..?