ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்! பொங்கலுக்கு வங்கிக்கணக்கில் பணம்..! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

puducherry ration card money

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டது.. 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை தரப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.. அரசு ஊழியர்கள், கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச ஆடை வழங்கல் திட்டம் இனி இருக்காது என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.. பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.. பொங்கல் ஆடைகளுக்கு நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெட்ரோல் நிலையங்கள் இனி பெட்ரோலுக்காக மட்டும் அல்ல..! மத்திய அரசின் மாஸ்டர் பிளான்..! இது தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

RUPA

Next Post

தாய்லாந்து - கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் அமல்..! பல வாரங்கள் நீடித்த மோசமான எல்லை மோதல்களுக்கு பிறகு முடிவு.!

Sat Dec 27 , 2025
வாரக்கணக்கில் நீடித்த கடுமையான எல்லை மோதல்களைத் தொடர்ந்து, சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் (உள்ளூர் நேரம்) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கம்போடியாவும் தாய்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.. இந்த வன்முறை மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொது எல்லையில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பதட்டங்களைத் தணித்து, அமைதியான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் […]
thai combodia 1

You May Like