தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!! இன்றுடன் நிறைவு பெறுகிறது அக்னி நட்சத்திரம்..!! இனி வெளுத்து வாங்கும் மழை..!!

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.

அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பம் உச்சத்தை தொடும். அந்த வகையில், இந்தாண்டு மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. சில மாவட்டங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவானது.


இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அக்னி நட்சத்திரம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர்.

CHELLA

Next Post

’என்னை முதல்வராக்கினால், 150 வயது வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன்’..!! - சரத்குமார்

Mon May 29 , 2023
என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. அப்போது கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசுகையில், ”சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என 2026இல் தெரியவரும். போதை இல்லா தமிழகத்தை […]
’என்னை முதல்வராக்கினால், 150 வயது வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன்’..!! - சரத்குமார்

You May Like