புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட்நியூஸ்.. உதயநிதி சொன்ன முக்கிய தகவல்..!

Magalir urimai thogai udhayanidhi

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.


இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு தொடங்கியது.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர்..

இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாகவும், இதில், தீர்வு காணப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்..

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி “ உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்த முகாம்கள் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 11.50 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்துள்ளது.

இந்த மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல், பொதுமக்களுடைய வாழ்க்கையாக, தனிமனிதனுடைய வாழ்க்கையாக பார்க்க வேண்டும்.. நமது அரசை நம்பி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை, நாம் முடிந்த அளவுக்கு வெகு விரைவாக அதை தீர்த்து வைக்க வேண்டும்..

இவற்றை வழக்கமான குறை தீர்ப்பு நாள் மனுக்களாகவோ, மற்ற சாதாரண மனுக்களாகவோ கருதக்கூடாது. இந்த மனுக்களுக்கு நீங்கள் அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுடைய தேவைகளை தீர்க்க வேண்டும்..” எப்ற்ய் ட்தெரிவித்தார்.. இதனால் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : முதலீடுகளை ஈர்க்கவா அல்லது குடும்ப முதலீடுகள் செய்யவா? முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து இபிஎஸ் கேள்வி..

RUPA

Next Post

வாரி வாரி வழங்கப்போகும் சுக்கிரன்.. இந்த 5 ராசிகளுக்கு பணத்திற்கு பஞ்சமே வராது..!

Sat Aug 30 , 2025
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகம். இந்த கிரகம் நல்ல நிலையில் சஞ்சரித்தால், மக்களின் வாழ்க்கை மாறும். குறிப்பாக, அவர்கள் நிதி ரீதியாக நன்றாக இருப்பார்கள். செல்வம் அதிகரிக்கும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளார். இந்த பெயச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். எனவே, அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மேஷம் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரனின் […]
zodiac signs

You May Like