#Flash : குட்நியூஸ்.. 3 நாட்களில் ரூ.1,760 குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்..

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை பின்னர் அதிரடியாக குறைந்தது.. அதன்படி 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 1,360 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 50 குறைந்து ரூ.9,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 3 நாட்களில் மட்டும் ரூ.1,760 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து, ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : செம கெத்து!. உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!. டிரம்ப் எந்த இடம்?.

RUPA

Next Post

கெட்ட கனவுகளை காணும் நபர்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்பு அதிகம்..! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Sat Jul 26 , 2025
A new study has revealed that people who have bad dreams are more likely to die prematurely.
FotoJet 2

You May Like