Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1,800 குறைந்த தங்கம் விலை… நகை வாங்க சரியான நேரம்..!

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்று முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்தது..

சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 135 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.225 குறைந்து ரூ. 11,100க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : அடுத்த ஷாக்..! 14,000 பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்.. கலக்கத்தில் ஊழியர்கள்..

RUPA

Next Post

பெண்களே உஷார்.. நீங்கள் தினமும் போடும் லிப்ஸ்டிக் கல்லீரலை பாதிக்கும்..!! - நிபுணர் எச்சரிக்கை..

Thu Oct 30 , 2025
How Lipstick Can Affect Your Health — Expert Explains
Lipstick 2025

You May Like